Monday, March 9, 2020

ஸ்ரீலலிதா ஸ்தவ ரத்னம் (126-135)



ஸ்ரீலலிதா ஸ்தவ ரத்னம் (ஆர்யா த்விசதீ)


மஹரிஷி துர்வாசர் இயற்றியது



(ஸ்லோகம் 126-135) 





சக்ராணாம் ஸகலாநாம்
ப்ரதமமத: ஸீமபலகவாஸ்தவ்யா:
அணிமாதிஸித்த்தயோ மாம்
அவந்து தேவீ ப்ரபாஸ்வரூபிண்ய:

எல்லா சக்கிரங்களுக்கும் அடித்தட்டில் வசிக்கிற அணிமா முதலிய ஸித்திதேவிகள் தேவியின் ஒளிக்கதிர் வடிவினர். அவர்கள் என்னைக் காப்பாற்றட்டும். (பேரொளியாக உள்ள தேவியிலிருந்து வெளிப்படுகிற ஒளிக்கதிர்களே ஆவரண தேவதைகள். தேவியிடமிருந்து வேறுபட்டவர்களல்ல. "அணிமாதிபிர் ஆவ்ருதாம் மயூகை:". அணிமா, லகிமா, மஹிமா, ஈசித்வம், வசித்வம், ப்ரகாம்யம், புக்தி, இச்சா, ப்ராப்தி, ஸர்வகாமா என்ற பத்து ஸித்திதேவிகள்). (126)


அணிமாதிஸித்த்தி பலகஸ்யோபரி
ஹரிணாங்கக் கண்ட க்ருத சூடா:
பத்ரம் பக்ஷ்மலயந்து
ப்ராம்ஹீ ப்ரமுகாச்ச மாதரோsஸ்மாகம்

அணிமாதி ஸித்திதேவதைகளாலான பலகைக்கு மேலமர்ந்த பிராம்ஹீ முதலான மாதாக்கள் சந்திரனின் பிறையைச் சூடியவர்கள் தேவியின் ஒளிக்கதிர் வடிவினர். அவர்கள் என் க்ஷேமத்தை உறுதிபெறச் செய்யட்டும். (விழித்திருக்கச் செய்யட்டும்). (ப்ராம்ஹீ, மாஹேச்வரீ, கௌமாரீ, வைஷ்ணவீ, வாராஹீ, மாஹேந்த்ரீ, சாமுண்டா, மஹாலக்ஷ்மீ என மாதாக்கள் எண்மர்). (127)


தஸ்யோபரி மணிபலகே
தாருண்யோத்துங்க பீநகுசபாரா:
ஸம்க்ஷோபிணீ ப்ரதாநா:
ப்ப்ராந்திம் வித்ராவயந்து தச முத்ரா:

அதற்கு மேலுள்ள ரத்தினப் பலகையில் யௌவனத்தால் நிமிர்ந்த பருத்த மார்பகங்களுள்ள ஸம்க்ஷோபிணீயை முதல்வியாகக் கொண்ட முத்ரா தேவிகள் உள்ளனர். அவர்கள் குழப்பத்தை விரட்டட்டும். (முத்ரா சக்திகள் பத்து. ஸர்வ என்ற அடைமொழியைக் கொண்ட ஸம்க்ஷோபிணீ, வித்ராவிணீ, ஆகர்ஷிணீ, வசங்கரீ, உந்மாதினீ, மஹாங்குசா, கேசரீ, யோனி, திரிகண்டா என இந்த சக்திகள் முத்திரையிட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளவை, அவற்றை முத்திரைகள் மூலம் வெளிப்படுத்துவர்). (128)


பலகத்ரயஸ்வரூபே
ப்ருதுலே த்ரைலோக்ய மோஹனே சக்ரே
தீவ்யந்து ப்ரகடாக்க்யா:
தாஸாம் கர்த்ரீ ச பகவதீ த்ரிபுரா

மூன்று பலகைகளாக உருவான த்ரைலோக்ய மோஹனமெனும் சக்கிரத்தில் பிரகடா என்ற யோகினிகள் உள்ளனர். அவர்களைத் தோற்றுவித்தவள் பகவதியான திரிபுரை. (ஸ்ரீசக்ரத்தின் முதல் வெளி ஆவரணம்  த்ரைலோக்ய மோஹனம் எனும் சக்கிரம். அதிலுள்ள யோகினிகள் பிரகடா எனப்படுவர். தேவியை அடைய தேவியே வெளி உலகப்பற்றிலிருந்து பிரித்துப் பரமாத்ம தத்துவமான தன்னிடம் யோகமடையச் செய்ய யோகினி வடிவேற்கிறாள். ஸம்க்ஷோபிணீமுதலியவரும் பிராம்மீ முதலானவரும் அணிமா முதலிய ஸித்தி தேவிகளும் பிரகடயோகினிகளாவர். ஸ்தூலம் ஸூக்ஷ்மம் காரணம் என்ற மூன்று தேஹங்களில் ஸ்தூலத்தில் விழிப்பு நிலையில் தான் என்ற எண்ணம் உண்டாகிறது. இது பாமரனும் வெளிப்படையாக உணருமிடம். இவற்றில் மாறுதல் ஏற்படுத்தி உட்புறம் திருப்புபவரானதால் பிரகடா. வெளியிலுள்ள மூவுலகங்களையும் வசப்படுத்தி ஈர்க்கிற சக்தி உள்ளதால் இது திரைலோக்ய மோஹனம். இந்த பிரகடயோகினிகளின் தலைவி திரிபுரா எனும் சக்ரேச்வரி. அவள் மஹாதிரிபுரஸுந்தரியின் ஒரு ஒளிக்கதிரே). (129)


ததுபரி விமலே திஷ்ண்யே
தரள த்ருசஸ்தருணகோக நதபாஸ:
காமாகர்ஷிண்யாத்யா:
கலயே தேவீ: கலாதரசிகண்டா:

அதன் மீது தூய இருப்பிடத்தில் அலைபாய்கிற பார்வையுள்ளவர்களும் புதிய செவ்வல்லி நிறமுள்ளவர்களும் பிறை சூடியவர்களுமான காமாகர்ஷிணீ முதலிய தேவிகளைத் தியானிக்கிறேன். (காமாகர்ஷிணீ, புத்த்யாகர்ஷிணீ, அஹங்காராகர்ஷிணீ, சப்தாகர்ஷிணீ, ஸ்பர்சாகர்ஷிணீ, ரூபாகர்ஷிணீ, ரஸாகர்ஷிணீ, கந்த்தாகர்ஷிணீ, சித்தாகர்ஷிணீ, தைர்யாகர்ஷிணீ, ஸ்மிருத்யாகர்ஷிணீ, நாமாகர்ஷிணீ, பீஜாகர்ஷிணீ, ஆத்மாகர்ஷிணீ, அம்ருதாகர்ஷிணீ, சரீராகர்ஷிணீ என பதினாறு யோகினிகள். நித்யா கலா தேவிகள் எனப்படுவர். குப்த யோகினிகள் என்ற இவர்கள் மறைந்து நிற்பவர், ஸ்தூல சரீரம் வழியே வெளிப்படாமல் ஸூக்ஷ்ம சரீரமான இந்திரியம் மனம் புத்தி அஹங்காரம் சித்தம் வாஸனை ஸம்ஸ்காரம் என்ற ஸூக்ஷ்மமான உணர்வுகளைத் தன் வசப்படுத்தி நித்தியப் பொருளை உணர்வதற்கு இட்டுச்செல்வது இவர்களது பணி. தேவியின் சிற்றொளி உருவினர். (130)


ஸர்வாசாபரிபூரக சக்ரேsஸ்மின்
குப்தயோகினீ ஸேவ்யா
த்ரிபுரேசீ மம துரிதம்
துத்யாத் கண்ட்டா வலக்ன மணிஹாரா

இந்த ஸர்வாசாபரி பூரகம் எனும் சக்கிரத்தில் குப்த யோகினிகளால் பணிவிடை புரியப்படுகிற, கழுத்தில் ரத்னஹாரம் பூண்ட திரிபுரேசீ எனும் சக்ரேச்வரீ என் பாபத்தைப் போக்கட்டும். (எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேறச் செய்வதால் ஸர்வாசாபரிபூரகம். ஸ்தூலம் ஸூக்ஷ்மம் காரணம் என்ற மூன்று சரீரங்களும் இவளது ஆளுகைக்குட்படுவதால் திரிபுரேசீ). (131)


தஸ்யோபரி மணிபீடே
தாம்ராம்ப்போருஹதளப்ரபா சோணா:
த்யாயாம்யநங்க குஸுமா
ப்ரமுகா தேவீச்ச வித்த்ருத கூர்பாஸா:

அதன் மீது ரத்தின பீடத்தில் செந்தாமரை இதழ் ஒளி போன்று சிவந்தவர்களும் மார்புக்கச்சு அணிந்தவர்களுமான அநங்க குஸுமா முதலிய தேவிகளைத் தியானிக்கிறேன். (அநங்க குஸுமா, அநங்க மேகலா, அநங்கமதநா, அநங்கமதநாதுரா, அநங்க ரேகா, அநங்கவேகினீ, அநங்காங்குசா, அநங்கமாலினீ என்ற யோகினிகள் எண்மர்). (132)


ஸங்க்ஷோபகாரகேsஸ்மின்
சக்ரே ஸ்ரீத்ரிபுரஸுந்தரீ ஸாக்ஷாத்
கோப்த்ரீ குப்ததராக்க்யா கோபாயது மாம்
க்ருபார்த்ரயா த்ருஷ்ட்யா

ஸம்க்ஷோபகாரகம் என்ற இந்த சக்ரத்தில் அநங்ககுஸுமா முதலிய குப்ததரயோகினிகளுடன் காப்பாற்றுகின்றவளான ஸ்ரீதிரிபுரஸுந்தரீ என்ற சக்ரேச்வரீ என்னைக் கருணையில் நனைந்த பார்வையால் காப்பாற்றட்டும். (பலவாகவிருப்பதை மத்தித்துக் குழப்பிக் குழைத்து ஒன்றாக்கும் ஆற்றல் ஸர்வஸம்க்ஷோபணம். மூலதத்வங்களான மஹத்தும் அஹங்காரமும், பிரகிருதியும் புருஷனும் க்ஷோபணமடைந்து இணைந்ததன் விளைவுகள். அவை மேலும் க்ஷோபணமடைந்து பூத தன்மாத்திரங்கள், பூதங்கள், ஜ்ஞானேந்திரியம், கர்மேந்திரியம் அந்தக் கரணம், ஜீவன் என்று விரிந்து தனித்து தன்னைச் சேர்த்து எட்டாயின. அவை முன் சொன்ன குப்த நிலைக்கு முற்பட்டவை. மிகவும் குப்தம் - குப்ததரம். க்ஷோபிணீ  ஸூக்ஷ்மரூபிணீ. முப்புரங்களான ஸ்தூல ஸூக்ஷ்ம காரண சரீரங்களுள் அழகாக இருப்பவள் - ஸ்ரீத்ரிபுரஸுந்தரீ). (133)


ஸங்க்ஷோபிணீ ப்ரதாநா:
சக்தீ: தஸ்யோர்த்த்வவலயக்ருத வாஸா:
ஆலோலநீலவாணீ:
அந்த: கலயாமி யௌவநோந்மத்தா:

அதன் மீதுள்ள வட்டத்தில் வசிக்கிற ஸங்க்ஷோபிணீ முதலிய சக்திகள் கூந்தல் பின்னல்களாட, யௌவனத்தால் மதர்த்துள்ளனர். அவர்களை உள்ளத்தில் கொள்கிறேன். (ஸர்வ என்ற அடைமொழியுடன் ஸங்க்ஷோபிணீ, வித்ராவிணீ, ஆகர்ஷிணீ, ஆஹ்லாதிநீ, ஸம்மோஹினீ, ஸ்தம்ப்பினீ, ஜ்ரும்ப்பிணீ, வசங்கரீ, ரஞ்ஜினீ, உந்மாதினீ, அர்த்தஸாதினீ, ஸம்பத்தி பூரணீ, மந்த்ரமயீ, த்வந்த்வ க்ஷயங்கரீ என்ற பதினான்கு யோகினிகள்). (134)


ஸௌபாக்யதாயகேsஸ்மின்
சக்ரேசீ த்ரிபுரவாஸிநீ ஜீயாத்
சக்தீச்ச ஸம்ப்ரதாயாபிதா:
ஸமஸ்தா: ப்ரமோதயந்த்வநிசம்

இந்த ஸௌபாக்யதாயகமெனும் சக்ரத்தில் அதன் ஈசுவரியான திரிபுரவாஸினீ பெருமையுடன் விளங்கட்டும். ஸம்ப்ரதாய யோகினிகள் என்ற அனைத்து சக்திகளும் எப்போதும் மகிழ்விக்கட்டும். (குரு சீடனுக்குப் போதிப்பது, அந்த சீடன் குருவாகி அவனது சிஷ்யனுக்குப் போதிப்பது என்பது ஸம்ப்ரதாயம். உரிமைப்பொருளை உரிமையுள்ளவரிடம் சேர்ப்பது என்ற முறையில் தேவியே குருவடிவில் வந்து உபதேசிப்பதாகும். அதற்கான யோகினிகள் ஸங்க்ஷோபிணீ முதலியவர்கள். பூர்வபுண்யத்தின் பயனாகவும் தெய்வ அருளாலும் பெறுவது ஸௌபாக்யம். அதைத் தரும் சக்கிரம். இது தெய்வ அருளால் குரு கிடைப்பார். "தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்". குருமூர்தே த்வாம் நமாமிகாமாக்ஷி". (135)


Wednesday, February 5, 2020

ஸ்ரீலலிதா ஸ்தவ ரத்னம் (116-125)


ஸ்ரீலலிதா ஸ்தவ ரத்னம் (ஆர்யா த்விசதீ)


மஹரிஷி துர்வாசர் இயற்றியது


(ஸ்லோகம் 116-125) 






ஸதநஸ்யாநலகோணே
ஸததம் ப்ரணமாமி குண்டமாக்நேயம்
தத்ர ஸ்த்திதம் ச வந்ஹிம்
தரளசிகா ஜடிலம் அம்பிகா ஜனகம்

சிந்தாமணி க்ருஹத்தின் தென்கிழக்கில் லலிதை தோன்றிய இடமான அக்னி குண்டம் உள்ளது. அதனையும் அதிலுள்ள கொழுந்து விட்டு ஆடி அடர்ந்து எரிகிற அக்கினியையும் எப்போதும் வணங்குகிறேன். (இந்த அக்னிகுண்டம் சிதக்னி  குண்டமெனப்படும்). (116)


தஸ்யாஸுரதிசி தாத்ருச
ரத்ந பரிஸ்ப்புரித பர்வ நவகாட்ட்யம்
சக்ராத்மகம் சதாங்கம்
சதயோஐநமுன்னதம் பஜே திவ்யம்

சிந்தாமணி கிருஹத்தின் தென்மேற்கில், சிந்தாமணி ரத்தினத்திலான ஒளிமிக்க ஒன்பது தட்டுகளுள்ளதும் நூறுயோஜனை உயரமுள்ளதும் ஸ்ரீ சக்கிரவடிவில் உருவானதுமான தெய்வத்தன்மை பெற்ற ரதத்தை வழிபடுகிறேன். (இதனைச் சக்ரராஜரதம் என்பர்.) (117)


தத்ரைவ திசி நிஷண்ணம்
தபநீயத்த்வஜ பரம்பரா ச்லிஷ்டம்
ரதமபரம் ச பவான்யா:
ரசயாமோ மநஸி ரத்னமய சூடம்

அதே திசையில் தங்கக் கொடிகள் வரிசையாக இணைக்கப்பெற்று ரத்தினத்திலான சிகரம் கொண்ட தேவியின் மற்றொரு ரதம் உள்ளது. அதனைத் தியானிப்போம். (118)


பவநஸ்ய வாயுபாகே
பரிஷ்க்ருதோ விவிதவைஜயந்தீபி:
ரசயது முதம் ரதேந்த்ர:
ஸசிவேசான்யா: ஸமஸ்த வந்த்யாயா:

சிந்தாமணி க்ருஹத்தின் வடமேற்கில் பலவகைப்பட்ட கொடிகளுடன் எல்லோராலும் வணங்கத்தக்க மந்திரிணீ தேவியின் சிறந்த ரதம் உள்ளது. அது ஆனந்தமளிக்கட்டும் (இதனை கேய சக்ரரதம் என்பர்). (119)


குர்மோsதிஹ்ருத்யமநிசம்
க்ரோடாஸ்யாயா: சதாங்க மூர்த்த்ன்யம்
ருத்ரதிசி ரத்னதாம்நோ
ருசிர பலா(தா)கா ப்ரபஞ்ச கஞ்சுகிதம்

சிந்தாமணி கிருஹத்தின் வடகிழக்கில் அழகிய கொடிகளால் மறைக்கப்பெற்ற வாராஹியின் சிறந்த ரதத்தை எப்போதும் உள்ளத்திலுள்ள கொள்வோம். (இதை கிரி சக்ரரதம் என்பர்). (120)


பரிதோ தேவீ தாம்ந:
ப்ரணீதவாஸா மநுஸ்வரூபிண்ய:
குர்வந்து ரச்மிமாலாக்ருதய:
குசலானி தேவதா நிகிலா:

தேவியின் மாளிகையைச் சுற்றி மந்திர வடிவினர்களான எல்லா தேவதைகளும் ஒளிக்கதிர் வரிசை (ரச்மிமாலா)யாக உருவெடுத்து வசிக்கின்றனர். அவர்கள் நலனைச் செய்யட்டும். (121)


ப்ராக் த்வாரஸ்ய பவாநீதாம்ந:
பார்ச்வ த்வயாரசிதவாஸே
மாதங்கீகிடிமுக்க்யௌ
மணிஸதநே மநஸி பாவயாமி சிரம்

தேவியின் மாளிகையின் கிழக்கு வாயிலின் இருபுறங்களிலும் ரத்னமயமான மாளிகைகளில் மந்திரிணி (மாதங்கி)யும் வாராஹியும் வசிக்கின்றனர். அவர்களை வெகுநேரம் தியானிக்கிறேன். (122)


யோஜநயுகலாபோகா
க்ரோசபரீணாஹயைவ பித்த்யா ச
சிந்தாமணிக்ருஹபூமிர்
ஜீயாதாம்நாயமய சதுர்த்வாரா

இரு யோஜனைகள் பரப்புள்ள சிந்தாமணி கிருஹம் கால்யோஜனை தடிமனுள்ள சுற்றுச்சுவருடன் வேதங்களாலான நான்கு துவாரங்களுடன் உள்ளது. அது மேன்மையுடன் துலங்கட்டும். (123)


த்வாரே த்வாரே தாம்ந:
பிண்டீபூதா நவீனபிம்பாபா:
விததது விபுலாம் கீர்திம்
திவ்யா லௌஹித்ய ஸித்த்தயோ தேவ்ய:

சிந்தாமணி கிருஹத்தின் ஒவ்வொரு துவாரத்திலும் தெய்வத்தன்மை மிக்கவர்களும் விமர்ச சக்தியின் செயலாற்றலே உருவானவர்களுமான தேவிகள் புதிய பதுமைகள் போல் இறுகிய உறுப்பெற்றவர்களாக உள்ளனர். அவர்கள் பெரும் புகழைத்தரட்டும். (பிரகாசமான பிரும்மத்திடம் தனித்தன்மையை வெளிப்படுத்தாது அடங்கியுள்ள சக்தி, உலகமாக விரிவதற்காக வெளிப்பட்டு பற்பல ஆற்றல்களாக விரிவடைகிற நிலை விமர்சம். நிறமற்ற ஸூர்ய ஒளி விடியற்காலையில் தன் ஆற்றலை விளக்குகிற முதல் நிலையாக லௌஹித்யம் என்ற செம்மையை முதலில் புதிதாகக் காட்டுவது போன்றது. லௌஹித்யம் (செம்மை) என்பது விமர்ச நிலையின் ஒரு விளக்கம். தேவியைப்பற்றிய அறிமுகம் பெற துவாரதேவிகளிடம் அந்த ஆற்றல்கள் பிண்டமாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளன). (124)


மணிஸதநஸ்யாந்தரதோ
மஹநீயே ரத்நவேதிகாமத்த்யே
பிந்துமய சக்ரமீடே
பீடாநாமுபரி விரசிதாவாஸம்

சிந்தாமணி கிருஹத்திலுள்ள கொண்டாடத்தக்க ரத்னமேடையின் நடுவே எல்லா பீடங்களின் மீது இடம்பெற்றுள்ள பிந்துவாலான சக்கிரத்தைத் துதிக்கிறேன். (125)


Thursday, December 19, 2019

ஸ்ரீலலிதா ஸ்தவ ரத்னம் (106-115)


ஸ்ரீலலிதா ஸ்தவ ரத்னம் (ஆர்யா த்விசதீ)


மஹரிஷி துர்வாசர் இயற்றியது

(ஸ்லோகம் 106-115) 





மணி ஸதநஸாலயோரதிமத்த்யம்
தசதால பூமிருஹதீர்க்கை:
பர்ணைஸ் ஸுவர்ணவர்ணைர்
யுக்தாம் காண்டைச்ச யோஜநோத்துங்கை:


சிந்தாமணி கிருஹத்திற்கும் சிருங்காரக் கோட்டைக்கும் இடையே பத்மாடவீ  என்ற தாமரைக் காடு உள்ளது. தாமரைகள் பத்து பனைமர உயரமும் தங்கநிற இலைகளும் யோஜனை தூரம் உயரம் கொண்ட தண்டுகளும் கொண்டவை. (106)


ம்ருதுளைஸ் தாலீபஞ்சகமாநை:
மிலிதாம் ச கேஸரகதம்பை:
ஸந்ததகலித மரந்த
ஸ்ரோதோ நிர்யன் மிலிந்த ஸந்தோஹாம்


ஐந்து பனைமர உயரமுள்ள கேஸரங்கள் கொண்டவை. எப்போதும் தேனருவி கசிந்து கொண்டிருக்க அதில் வண்டுகள் குவிந்து நிற்கும். (107)


பாடீர பவந பாலக
தாடீ நிர்யத் பராக பிஞ்ஜரிதாம்
கலஹம்ஸீ குல கல கல
கூலங்கக்ஷ நிநத நிசய கமநீயாம்
பத்மாடவீம் பஜாம: பரிமள கல்லோல பக்ஷமலோபாந்தாம்


சந்தனமணத்துடன் இளந்தென்றல் வீசுவதால் மகரந்தத்தூள் கலந்து மணக்கிற அந்தத் தாமரைக்காடு, அன்னப் பறவைக் கூட்டத்தின் கல கல ஒலி ஓடையின் இருகரைகளில் மோதி மனத்திற்கு இன்பம் தருகிறது. மணமிக்க அலைகளின் மோதலால் அழகிய கரைகள் உள்ள அந்த பத்மாடவீயை வணங்குகிறேன். (108)


தேவ்யர்க்க்யபாத்ரதாரீ
தஸ்யா: பூர்வதிசி தசகலாயுக்த:
வலயித மூர்த்திர் பகவான்
வந்ஹி: க்ரோசோந்ந்தச் சிரம் பாயாத்


பத்மாடவியின் கிழக்கில் தேவியின் அர்க்கிய பாத்திரத்தை ஏந்திப் பத்துகலைகளுடன் மண்டலமாகச் சூழ்ந்து ஒரு குரோசம் உயரம் எரிகிற பகவான் அக்னி வெகுகாலம் காப்பாராக. (இதுவந்ஹிப்ராகாரம். அக்னியின் கலைகள் பத்து - தூம்ரா, ஊஷ்மா, ஜ்வலினீ, ஜ்வாலினீ, விஸ்புலிங்கினீ, ஸுஸ்ரீ, ஸுரூபா, கபிலா. ஹவ்யவாஹினீ, கவ்யவாஹினீ என. க்ரோசம் - கால் யோஜனை 3-3.5 கி.மீ. அர்க்கிய பாத்திரத்தின் ஆதாரமாக அக்னி மண்டலத்தைக் கொள்வர்.) (109)


தத்ராதாரே தேவ்யா:
பாத்ரீரூப: ப்ரபாகர: ஸ்ரீமான்
த்வாதசகலாஸமேதோ
த்த்வாந்தம் மம பஹுலமாந்தரம் பிந்த்யாத்


அந்த அக்னி மண்டலமாகிற ஆதாரத்தின் மீது அர்க்க்யம் வைக்கிற பாத்திரத்தின் உருவகமான சீர் மிக்க ஸூர்யன் பன்னிரண்டு கலைகள் கூடியவராக என் உள்ளத்துப் பேரிருளைத் தகர்க்கட்டும். (அர்க்கிய பாத்திரம் ஸூர்யமண்டலம். தபினீ, தாபினீ, தூம்ரா, மரீசி, ஜ்வலிநீ, ருசி, ஸுஷூம்நா, போகதா, விச்வா, போதினீ, தாரிணீ, க்ஷமா எனப் பன்னிரண்டு ஸூர்ய கலைகள்.) (110)


தஸ்மின் தினேசபாத்ரே
தரங்கிதாமோதம் அம்ருதமயம் அர்க்க்யம்
சந்த்ரகலாத்மகம் அம்ருதம்
ஸாந்த்ரீகுர்யாத் அமந்தமாநந்தம்


ஸூரியனாலான அந்த பாத்திரத்தில் மணத்தை அலைபோல் பரப்புகிற அம்ருதமாகிய அர்க்க்யம் சந்திரகலைகளாலானது. அது ஆனந்தத்தை நெருக்கமுள்ளதாக்கட்டும். (111)


அம்ருதே தஸ்மிந்நபிதோ
விஹரந்த்யோ விவிதமனிதரணி பாஜ:
ஷோடச கலா: ஸுதாம்சோ
சோகாதுத்தாரயந்து மாமநிசம்


அந்த அர்க்கிய அமுதத்தில் சுற்றிலும் பலவகை ரத்தினத்தோணிகளில் விளையாடுகின்ற பதினாறு சந்திர கலைகளும் என்னை எப்போதும் துயரிலிருந்து கரை ஏற்றட்டும். (அர்க்கியத்திற்கான நீர் சந்திரமண்டலம். அம்ருதா, மானதா, பூஷா, துஷ்டி, புஷ்டி, ரதி, த்ருதி, சசிநீ, ப்ரியா, காந்தி, ஜ்யோத்ஸநா, ஸ்ரீ, பிரீதி, அங்கதா, பூர்ணா, பூர்ணாம்ருதா என சந்திரனின் கலைகள் பதினாறு.) (112)


தத்ரைவ விஹ்ருதி பாஜோ
தாத்ருமுகாநாம் ச காரணேசாநாம்
ஸ்ருஷ்ட்யாதி ரூபிகாஸ்தா:
சமயந்த்வகிலா: கலாச்ச ஸந்தாபம்


அந்த அர்க்கியத்தில் பிரும்மா முதலிய உலகின் காரணேச்வரர்கள் உலா வருகின்றனர். அதனால் படைப்பு முதலியவை நடைபெறுகின்றன. அதற்கான பிரும்மா முதலியவரின் கலைகள் அனைத்தும் தாபத்தைத் தணிக்கட்டும். (பிரும்மா, விஷ்ணு, ருத்ரர், ஈச்வரர், ஸதாசிவர் என்ற ஐவர் உலகின் காரண புருஷர்கள். காரணேசர்கள்) படைப்பு, காப்பு, ஒடுக்கம், மறைப்பு, அனுக்ரஹம் என அவர்களின் பணிகள். அதற்கு உதவ, பிரும்மாவிற்கு ஸ்ருஷ்டி, ருத்தி, ஸ்ம்ருதி, மேதா, சாந்தி, லக்ஷ்மீ. த்யுதி, ஸ்த்திரா, ஸ்த்திதி, ஸித்த்தி என பத்து  கலைகள். விஷ்ணுவிற்கு ஜரா, பாலிநீ, சாந்தி, ஈச்வரீ, ரதி, காமிகா, வரதா, ஹ்லாதினீ, ப்ரீதி, தீர்க்கா என பத்து கலைகள். ருத்திரருக்கு தீஷ்ணா, ரௌத்ரீ, பயா, நித்ரா, தந்த்ரீ, க்ஷுதா, க்ரோதினீ, க்ரியா, உத்காரீ, ம்ருத்யு என பத்து கலைகள். ஈச்வரருக்கு பீதா, ச்வேதா, அருணா, அஸிதா என நான்கு கலைகள். ஸதாசிவருக்கு நிவ்ருத்தி, ப்ரதிஷ்ட்டா, வித்யா, சாந்தி, இந்த்திகா, தீபிகா, ரேசிகா, மோசிகா, பரா, ஸூக்ஷ்மா, ஸூக்ஷ்மாம்ருதா, ஜ்ஞானா, ஜ்ஞானாம்ருதா, ஆப்யாயினீ, வ்யாபினீ, வ்யோமரூபா என பதினாறு கலைகள். ஆக ஐம்பது கலைகள் அர்க்க்யாம்ருதத்தின் விளைவானவை.) (113)


கீநாச வருண கிந்நர
ராஜதிகந்தேஷு ரத்னகேஹஸ்ய
கலயாமி தான்யஜஸ்ரம்
கலயந்த்வாயுஷ்யம் அர்க்க்ய பாத்ராணி


சிந்தாமணி கிருஹத்தின் தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளில் அமைக்கப்பெற்றுள்ள அந்த அர்க்க்ய பாத்திரங்களை எப்போதும் தியானிக்கிறேன். அவை என் ஆயுளை வளர்க்கட்டும். (114)


பாத்ரஸ்த்தலஸ்ய புரத:
பத்மாரமண விதி பார்வதீசாநாம்
பவநாநி சர்மணே நோ
பவந்து ப்பாஸா ப்ரதீபித ஜகந்தி


அந்த பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு எதிரில் அமைந்துள்ள விஷ்ணு, பிரம்மா, சிவன் இவர்களது மாளிகைகள் ஒளியால் உலகை விளக்குகின்றன. அவை எனக்கு நலம் புரியட்டும். (115)